‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படக்குழுவினரின் தொடரும் அட்ராசிட்டி

’மஞ்சும்மல் பாய்ஸ்’ படக்குழுவினரின் செயலால் தொடர்ச்சியாக பலரும் கடும் அவஸ்தைபட்டு வருகிறார்கள்.

சிதம்பரம் பொடுவால் இயக்கத்தில் பிப்ரவரி 22-ம் தேதி வெளியான படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. மலையாளத்தில் வெளியான இந்தப் படம் கேரளாவை விட தமிழகத்தில் மாபெரும் வரவேற்பு பெற்றது. தற்போது தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியாகவுள்ளது. இதில் சவுபின் ஷாயிர், ஸ்ரீநாத் பாஸி, பாலு வர்கீஸ், காலித் ரஹ்மான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமிழகத்தில் கிடைத்த வரவேற்பினால், சென்னைக்கு பல்வேறு நடிகர்களை சந்திக்க அடிக்கடி வந்திருந்தனர். ஒவ்வொரு முறை வரும் போது, அதற்கான ஏற்பாடுகளை செய்பவர்கள் கடும் அவஸ்தைக்கு ஆளாகியுள்ளனர்.

ஏனென்றால் ஒவ்வொரு முறை ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ ஒட்டுமொத்த குழுவினரும் வருவதால், இரவு நேர விருந்தில் கழிக்கிறார்கள். சில சமயங்களில் காலையிலேயே ஆரம்பித்துவிடுகிறார்கள். சந்தோஷமாக இருக்கலாம் அதற்காக இப்படியா என்று ஏற்பாடுகளை செய்பவர்கள் புலம்ப தொடங்கியிருக்கிறார்கள்.

’மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் சுமார் 220 கோடியைத் தாண்டி மொத்த வசூல் செய்திருக்கிறது. அந்த  சந்தோஷத்தில் இருந்து படக்குழுவினர் இன்னும் வெளியே வரவில்லை என்றே தோன்றுகிறது. இந்தச் சந்தோஷத்திலேயே இருந்தால் அடுத்த வெற்றியை எப்படி ருசிப்பார்கள் என்பது தான் அனைவருடைய கேள்வியும்.

Read Previous

அட்லீ தயாரிப்பில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படக்குழு

Read Next

‘ரஜினி 171’ படத்தில் ரன்வீர்சிங்?

Most Popular