அட்லீ தயாரிக்கவுள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கவுள்ளார்.
‘ஜவான்’ வெற்றிக்குப் பிறகு, அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள படத்தினை இயக்கவுள்ளார் அட்லீ. அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். சன் பிக்சர்ஸ் மற்றும் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் எனத் தெரிகிறது.
இதனிடையே, ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார் அட்லீ. ஆனால் அதற்கு பிறகு எந்தவொரு படத்தினையும் தயாரிக்கவில்லை. தற்போது மீண்டும் படத்தயாரிப்பில் தீவிரம் காட்டத் தொடங்கியிருக்கிறார் அட்லீ.
இந்தியில் ‘தெறி’ ரீமேக்கினை ‘பேபி ஜான்’ என்ற பெயரில் தயாரித்து வருகிறார். இதில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார். மீண்டும் தமிழில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தினை தயாரிக்கவுள்ளார். இதனை ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘சீதக்காதி’ படங்களின் இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கவுள்ளார்.
’ஜவான்’ படத்தில் ஷாரூக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதியை நடிக்க வைத்தவர் அட்லீ. தற்போது அவரை வைத்து படத்தயாரிப்பிலும் இறங்கியிருக்கிறார்.