மாரி செல்வராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மார்ச் 7-ம் தேதி மாரி செல்வராஜ் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். அன்றைய தினத்தில் அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களுடைய இயக்குநர் மாரி செல்வராஜுக்கு வாழ்த்துகள் என்று தங்களுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.
இந்தப் பதிவை முன்வைத்து பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார் என்பது உறுதியானது. மேலும், இந்தப் படத்தின் கார்த்தி தான் நாயகன் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக விசாரித்த போது, தற்போது துருவ் விக்ரம் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் மாரி செல்வராஜ். அதற்குப் பிறகு ரஜினி நடிக்கவுள்ள படம், தனுஷ் நடிக்கவுள்ள படம் என இரண்டு படங்கள் ஏற்கனவே ஒப்பந்தமாகிவிட்டார்.
இந்த மூன்று படங்களையும் முடித்துவிட்டே, கார்த்தி நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார். மேலும், அந்தச் சமயத்தில் இருவருடைய தேதிகள் ஒத்துவந்தால் மட்டுமே இந்தக் கூட்டணி அமையும் என்றே தெரிகிறது.