விரைவில் ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’ படத்தின் 2-ம் பாகம் உருவாகவுள்ளது.

செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சதீஷ், ரெஜினா, நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ’கான்ஜுரிங் கண்ணப்பன்’.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் டிசம்பர் 8-ம் தேதி வெளியானது. இசையமைப்பாளராக யுவன் பணியாற்றி இருந்தார்.

பேய் படங்களில் கொஞ்சம் வித்தியாசமாகவும், அதே சமயத்தில் காமெடியாகவும் உருவாகியிருந்தது. இதனால் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பும் கிடைத்தது. இதனை முன்வைத்து ஓடிடி, தொலைக்காட்சி உரிமம் விற்பனையானது. இவை அனைத்தையும் வைத்து படக்குழுவினருக்கு நல்ல லாபம் கிடைத்தது.

இதற்குப் பிறகு வெளியான ’வித்தைக்காரன்’ எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. தற்போது மீண்டும் ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’ படத்தின் 2-ம் பாகத்தினை உருவாக்க இருக்கிறது படக்குழு.

ஏஜிஎஸ் நிறுவனமே தயாரிக்க நாயகனாக சதீஷ் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். முதல் பாகத்தினை இயக்கிய செல்வின் ராஜ் சேவியர் தான் இயக்கவுள்ளார். கதையை இறுதிச் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Read Previous

பூஜையுடன் துவங்கியது ஆரி அர்ஜுனனின் அடுத்த படம்

Read Next

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கார்த்தி?

Most Popular