‘மாநாடு’ – இசை வேலையில் யுவன், வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் சிம்பு நாயகனாக நடிக்கும் ‘மாநாடு’ படம் சில பல சர்ச்சைகளுக்குப் பிறகு மீண்டும் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று தெரிகிறது. இதனிடையே படத்திற்கான இசை வேலையை படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா ஆரம்பித்துவிட்டனர்.

இது பற்றி டிவிட்டரில் வெங்கட் பிரபுவுடன் இருக்கும் செல்பி ஒன்றுடன் ‘மாநாடு 2020’ என யுவன் பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் ‘மாநாடு’ படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் என்பது உறுதி ஆகியுள்ளது.

யுவன் – சிம்பு கூட்டணியும், யுவன் – வெங்கட் பிரபு கூட்டணியும் ஏற்கெனவே பல ஹிட்டுகளைக் கொடுத்துள்ளது. இப்போது ‘யுவன், சிம்பு, வெங்கட் பிரபு’ கூட்டணி முதல் முறையாக இணைவதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

Read Previous

தனுஷ் நடிக்கும் ‘கர்ணன்’ ஆரம்பம்

Read Next

ஜீ சினிமா விருதுகள் தமிழ் 2020 – வென்றவர்கள் விவரம்

Most Popular