வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ், ரஜிஷா விஜயன், லால், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கர்ணன்’.
தனுஷின் 41வது படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நெல்லையில் ஆரம்பமானது.
‘பரியேறும் பெருமாள்’ படத்திற்குப் பின் மாரி செல்வராஜ் இயக்கும் படம் இது.
இப்படம் மூலம் மலையாள நடிகையான ரஜிஷா விஜயன் தமிழுக்கு அறிமுகமாகிறார்.
சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
படம் பற்றி தயாரிப்பாளர் தாணு டிவிட்டரில், “கர்ணன் – அன்பு, இரக்கம், கருணை உள்ளவர் மட்டுமல்ல, வெற்றியையும் தருபவர் ! தொடர் படப்பிடிப்பில்..” எனப் பதிவிட்டுள்ளார்.