கலைஞர் நூற்றாண்டு விழாவிற்காக முன்னணி நடிகர்களுக்கு முக்கியமான வாய்மொழி உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் ‘கலைஞர் 100’ என்ற பெயரில் கலைஞர் நூற்றாண்டு விழா கோலகலாமாக நடைபெறவுள்ளது. ஜனவரி 6-ம் தேதி கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இந்த விழா நடக்கிறது. இதற்காக தமிழ் திரையுலகில் உள்ள அனைத்து நடிகர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். மேலும், தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விழாவில் கலைஞரின் பெருமையை;ப போற்றும் வகையில் பல்வேறு நடனங்கள், பட்டிமன்றங்கள், பேச்சுகள் என நடைபெறவுள்ளது. இதற்காக பல்வேறு முன்னணி இயக்குநர்கள் தலைமையில் குழுக்கள் பிரிக்கப்பட்டு வேலைகள் மும்முரமாக நடக்கிறது. இந்த விழாவில் ரஜினி, கமல் கலந்து கொள்வது உறுதியாகிவிட்டது.
மேலும், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் ‘பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா’வில் அஜித்தின் பேச்சு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளார் என்றும் பேசப்பட்டு வருகிறது. இதனால் விஜய், அஜித் கலந்து கொள்வது சந்தேகம் தான் என்று சொல்லப்படுகிறது.
இதனிடையே, தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் வாய்மொழி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். ‘கலைஞர் 100’ விழாவில் கலந்து கொள்ளாத நடிகர்களுக்கு தயாரிப்பாளர் சங்கத்தின் ஒத்துழைப்பு அளிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளார்கள். அதாவது முன்னணி நடிகர்களின் படப்பிடிப்புகளில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், அதன் பேச்சுவார்த்தையில் தயாரிப்பாளர் சங்கம் ஈடுபடாது என்பது தான் இதன் சாரம்சம்.
எப்படியாவது அனைத்து நடிகர்களையும் ஒன்று திரட்டிவிட வேண்டும் என்று நினைக்கிறது தயாரிப்ப்பாளர் சங்கம். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
ஓரிரு நாட்களில் யார், யார் கலந்து கொள்கிறார்கள் என்ற தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.