ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’.
லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு எப்போது முடிவடையும் என்பதே தெரியாமல் உள்ளது.
இது தொடர்பாக விசாரித்த போது, படத்தின் பட்ஜெட் எகிறியதால் இரண்டு மற்றும் மூன்றாம் பாங்களாக படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாம் படக்குழு. கதைப்படி ‘இந்தியன் 3’ தயாராகவுள்ளது. தற்போது ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பைத் தான் நடத்தி வருகிறார்கள். இதிலும் பெரும்பாலான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டுவிட்டன.
இன்னும் ஒரே ஒரு பாடல் படப்பிடிப்பு மட்டுமே பாக்கியுள்ளது. இதனை இம்மாத இறுதியில் தொடங்கி, பிப்ரவரி முதல் வாரத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. அத்துடன் ஒட்டுமொத்த ‘இந்தியன் 2’ படப்பிடிப்பும் முடிந்துவிடும். இறுதிக்கட்டப் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிடலாம் என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது படக்குழு.