விஜய் டிவியில் புதிய தொடர் ‘காற்றின் மொழி’

விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய காதல் கலந்த, குடும்ப நெடுந்தொடர் காற்றின் மொழி.

இத்தொடர் அக்டோபர் 07 முதல் இரவு 9.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

கண்மணி பிறவியிலேயே வாய் பேச முடியாதவள். அவள் பிறந்தது குடும்பத்திற்கு துரதிஷ்டம் என்று ஜோதிடர் சொன்னதை வைத்து, அவளது பாட்டி மற்றும் குடும்பத்தினர் அவளை வீட்டில் இருந்து விலக்கி வைக்கின்றனர். கண்மணிக்கு அவள் அப்பா என்றால் கொள்ளை பிரியம்.

சந்தோஷ் கதையின் நாயகன். அமெரிக்காவில் படிப்பை முடித்து சொந்த ஊர் திரும்பும் இளைஞன். கண்மணியும் அவனும் குழைந்தைப் பருவ நண்பர்கள். சந்தோஷ், கண்மணியை பார்த்தவுடன் அவளின் குணத்தில், அழகில் மயங்கி அவளைக் காதலிக்கிறான்.

ஆனால், கண்மணி அவள் அப்பாவின் அன்பு மட்டும் கிடைத்தாலே போதும் என்று நினைக்கிறாள். சந்தோஷ், கண்மணியின் மனதில் இடம் பிடிப்பானா ?, கண்மணிக்கு அவள் அப்பாவின் அன்பு கிடைக்குமா ? என்பதுதான் இத் தொடரின் கதை.
ராம் குமார் இயக்கும் இத் தொடரில் ‘ராஜா ராணி’ தொடரின் நாயகன் சஞ்சீவ், பிரியங்கா, மனோகர், அனிலாஸ்ரீ மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

Read Previous

விஜய் டிவி தொடர் – நாகலோகத்தின் கதை ‘தாழம்பூ’

Read Next

ரஷ்யாவில் ‘அக்னி சிறகுகள்’ படப்பிடிப்பு

Most Popular