ரஷ்யாவில் ‘அக்னி சிறகுகள்’ படப்பிடிப்பு

அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிப்பில், நவீன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, அருண் விஜய், அக்ஷராஹாசன், ஷாலினி பான்டே, பிரகாஷ்ராஜ், ஜே சதீஷ்குமார், சென்ட்ராயன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அக்னி சிறகுகள்’.

இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் ரஷ்யா புறப்பட்டுச் சென்றுள்ளனர். அங்கு மாஸ்கோ, செயின்ட்பீட்டர்ஸ்பர்க் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

அது பற்றி படத்தின் இயக்குனர் நவீன் கூறுகையில்,

“எங்களது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை ரஷ்யாவில் துவங்க உள்ளோம். அங்கு படத்தின் முக்கியமான பகுதிகளும், படத்தின் முக்கிய ஆக்சன் காட்சிகளையும் படமாக்க உள்ளோம்.

கடந்த மாதமே இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க வேண்டியது. அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி அவர்களது மற்ற படங்களிள் பிஸியாக இருந்தார்கள்.

ரஷ்யாவின் மாஸ்கோ, செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் படத்திற்கான தகுந்த லொகேஷன்களை நாங்கள் தேடினோம். எங்களது படத்திற்கான மிகச் சிறந்த லோகெஷன்கள் இங்கு கிடைத்திருக்கிறது.

இந்த நேரத்தில் எங்கள் படக்குழுவிற்கு இவ்வளவு காலத்தையும் கடந்து ஆதரவு தந்ததற்கு தயாரிப்பாளர் T சிவா சார் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர் தந்த ஊக்கமும் ஆதரவும் தான் இப்படம் இந்த அளவு தரமாக உருவாவதற்கு காரணம்.

ரஷ்யாவில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.

ஆக்‌ஷன், திரில்லராக உருவாகும் இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு கொல்கத்தாவில் மிகச்சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. அருண் விஜய், விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கும் இப்படத்தில் ஷாலினி ஃபாண்டே, அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். மேலும் பிரகாஷ் ராஜ் உடபட பல முக்கிய நடிகர்களும் நடிக்கிறார்கள். K S பாச்சா ஒளிப்பதிவு செய்ய, நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். ஆரம்பம் முதலாக எதிர்ப்பர்ப்பின் உச்சத்தில் இருக்கும் இப்படத்தை மிகப்பெரும் பட்ஜெட்டில் T. சிவா தயாரிக்கிறார்.

Read Previous

விஜய் டிவியில் புதிய தொடர் ‘காற்றின் மொழி’

Read Next

நல்ல படம் கொடுத்தால் கொண்டாடுவீர்கள் – ஜெயம் ரவி

Most Popular