டாக்டர்ஸ் படத்தில் தமிழ் பேசத் தெரிந்த நாயகி

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள படம் ‘டாக்டர்ஸ்’.

இப்படம் பற்றிய அறிவிப்பு இரு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

இன்று இப்படத்தின் புதுப்பிக்கப்பட்ட அறிவிப்புகள் வெளியானது. அதன்படி படத்தின் நாயகியாக பிரியங்கா மோகன் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. வினய், யோகி பாபு ஆகியோரும் இப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார்கள்.

பிரியங்கா மோகன்,  சமீபத்தில் நானி நடித்து தெலுங்கில் வெளிவந்த  ‘கேங் லீடர்’ படத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர்.

‘டாக்டர்ஸ்’ படத்தில் தமிழ் பேசத் தெரிந்த நடிகை வேண்டும் என்பதற்காக தேடிப் பிடித்து பிரியங்கா மோகனைத் தேர்வு செய்துள்ளார்கள்.

துபாயில் பிறந்து வளர்ந்த மலையாளப் பெண் என்றாலும் தமிழ் நன்றாகப் பேசுவாராம்.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

Read Previous

‘தனுசு ராசி நேயர்களே’ – யோகி பாபு ராசிக்கு என்ன ஆச்சு ?

Read Next

மீண்டும் அருண் விஜய், அறிவழகன் கூட்டணி

Most Popular