‘தனுசு ராசி நேயர்களே’ – யோகி பாபு ராசிக்கு என்ன ஆச்சு ?

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள ஒரே முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு மட்டுமே. அவர் எப்போதோ ஒரு சில காட்சிகளில் நடித்த படங்களைக் கூட துஹசி தட்டி எடுத்து அவர் படம் முழுவதும் வந்தது போல பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தி ரசிகர்களைக் கவரப் பார்க்கிறார்கள்.

யோகி பாபு படத்தில் இருந்தாலே ரசிகர்கள் தியேட்டருக்கு வந்துவிடுவார்கள் என்ற நப்பாசையில் அவரை எப்படியாவது தங்களது படங்களில் நடிக்க வைக்க முயற்சிக்கிறார்கள்.

அப்படி யோகி பாபு ஒரு சில நாட்கள் மட்டுமே நடித்த படம் ‘தனுசு ராசி நேயர்களே’. படத்தின் இசை வெளியீடு வரை வெளியான விளம்பரங்களில் கதாநாயகன் ஹரிஷ் கல்யாணுடன் யோகி பாபுவும் இடம் பெற்றிருந்தார். ஆனால், கடந்த சில நாட்களாக வெளியான விளம்பரங்களில் யோகி பாபுவைக் காணவில்லை.

தமிழ் சினிமாவில் ராசியான ஒரு நடிகராக இருக்கும் யோகி பாபுவின் ராசி சரியில்லை என நினைத்து அவரை இருட்டடிடிப்பு செய்துவிட்டார்களா அல்லது வேறு ஏதும் பிரச்சினையா எனத் தெரியவில்லை.

இத்தனைக்கும் படத்தின் டிரைலரின் கடைசியில் யோகி பாபுவின் குரலில்தான் ‘தனுசு ராசி நேயர்களே’ என்று குரல் கொடுக்க வைத்திருக்கிறார்கள்.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலமாக பிரபலமான ஹரிஷ் கல்யாண், நடித்து வெளிவந்த ‘பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகமாக இருந்ததால் ஓரளவிற்கு வரவேற்பைப் பெற்றன. அது போலவே இந்தப் படத்திலும் சில பல காட்சிகளை வைத்திருக்கிறார்களாம்.

அந்த ‘டபுள் மீனிங்’ வசன ராசி தங்கள் படத்திற்கும் வொர்க் அவுட் ஆகும் என படக்குழு நினைக்கிறதாம்.

நடிகர் தனுஷுக்கு இப்ப நல்ல ராசியாதான் இருக்கு. ‘அசுரன்’ பெரிய வெற்றி. வரவே வராதுன்னு சொன்ன ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ வந்துடுச்சு.

ஆனால், இந்த ‘தனுசு ராசிக்கு’ ராசி எப்படி இருக்கப் போகுதுன்னு இரண்டு நாள்ல தெரிஞ்சிடும்.

Read Previous

சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ – ‘சுட்ட’ கதையா ?

Read Next

டாக்டர்ஸ் படத்தில் தமிழ் பேசத் தெரிந்த நாயகி