கொரானோ வைரஸ் அச்சத்தால் விதிக்கப்பட்ட 21 நாள் ஊரடங்கு உத்தரவால் சமூக விலகலைப் பலரும் கடைபிடித்து வருகின்றனர்.
ஒரே ஊரில் இருந்தால் கூட தங்களுடன் பிறந்தவர்களையும், உறவினர்களையும், நண்பர்களையும் பார்க்காமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
நடிகர் தனுஷ் குடும்பத்தினர் அனைவரும் சென்னையில்தான் உள்ளனர். அண்ணன் செல்வராகவன், அப்பா கஸ்தூரிராஜா, அக்கா குடும்பத்தினர் என அனைவருமே சென்னையில்தான் வசிக்கின்றனர்.
ஆனால், இந்த கொரானோவால் ஒருவரையொருவர் பார்க்க முடியவில்லை என தனுஷ் அக்கா டாக்டர் காத்திகா தேவி வருத்தப்பட்டுள்ளார்.
“ஒருவரை ஒருவர் சந்திக்காமல் எனது வாழ்க்கையில் இதுவரையில் இப்படி நடந்ததில்லை. மாதத்திற்கு இரண்டு முறையாவது சந்தித்துக் கொள்வோம்.
ஒரே சிட்டியில் இருந்தால் கூட முதல் முறையாக ஒருவரை ஒருவர் விலகி இருக்கிறோம். இதற்கு முனபு இப்படி யாரையும் மிஸ் செய்ததே இல்லை.
உண்மையான அன்புடன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்கு ஈடு இணை இந்த உலகத்தில் எதுவும் இல்லை. உங்கள் அனைவரையும் மிஸ் செய்கிறேன்,” என தங்கள் குடும்பப் படத்தை வெளியிட்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.