‘மாஸ்டர்’ டிரைலர் எப்போது வரும் ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாஸ்டர்’.

ஊரடங்கு உத்தரவால் தியேட்டர்கள் மூடப்படவில்லை என்றால் இப்படம் நேற்று ஏப்ரல் 9ம் தேதி வெளியாகி இருக்கும். 

அந்த வருத்தம் இருந்தாலும் படம் நேற்று வெளியாகி இருந்தால் எப்படி இருந்திருக்கும் என விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஒரு கொண்டாட்டத்தை கொண்டாடி முடித்தார்கள்.

அப்போது பலரும் படத்தின் டிரைலரை சீக்கிரம் வெளியிடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள்.

ஊரடங்கு உத்தரவு இன்னும் எவ்வளவு நாள் நீட்டிக்கப்படும், தியேட்டர்கள் அதன் பின் உடனடியாக திறக்கப்படுமா அல்லது அது மேலும் தள்ளிப் போகுமா என்று தெரியாமல் திரையுலகினர் குழப்பமாகவே இருக்கிறார்கள்.

எனவே, ‘மாஸ்டர்’ படத்தின் வெளியீட்டுத் தேதி உறுதி செய்யப்பட்ட பின்தான் படத்தின் டிரைலரை தயாரிப்பாளர்கள் வெளியிட உள்ளார்களாம்.

Read Previous

சந்திக்க முடியவில்லை, தனுஷ் அக்காவின் வருத்தம்

Read Next

டீ ஷர்ட் சேலன்ஞ்ச் – சும்மாவே இருக்க மாட்டார்களோ ?

Most Popular