கொரானோ வைரஸ் பரவல் காரணமாக இந்திய அரசு 21 நாள் ஊரடங்கு அறிவித்தாலும் அறிவித்தார்கள், வீட்டில் என்ன செய்வதென்று தெரியாமல் சிலர் சேலன்ஞ்ச், சேலன்ஞ்ச் ஆகி அறிவித்து வருகிறார்கள்.
அதையும் சில பிரபலங்கள் செய்து, மற்றவர்களையும் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பு ‘புடவை சேலன்ஞ்ச்’ என்ற ஒன்று வந்தது. இப்போது டீ ஷர்ட் சேலன்ஞ்சாம். அதையும் டீ ஷர்ட்டை அப்படியே நின்றபடி போடக் கூடாது.
கால்களை சுற்றில் பின்புறமாக தூக்கிக் கொண்டு, இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி, ஒரு கையை விட்டு இரண்டாவது கையை தூக்கி டீ ஷர்ட்டை மாட்ட வேண்டும்.
தப்பித் தவறி கீழே விழுந்து, பல்லோ, மண்டையோ உடைந்தால் சேலன்ஞ்ச் செய்யச் சொன்னவர்கள் பொறுப்பாக மாட்டார்கள்.
இதையும் சிலர் செய்துதான் வருகிறார்கள். நடிகை ரகுல் ப்ரீத் சிங் இந்த சேலன்ஞ்ச் செய்ததுதான் தற்போதைய சமூக வலைத்தள பரபரப்பு. அவருடைய வீடியோவை மட்டும் 11 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்.
அடுத்து என்ன சேலன்ஞ்ச் வைக்கப் போறாங்களோ ?