இந்தியாவில் விதிக்கப்பட்ட 21 நாள் ஊரடங்கால் புதிதாக எந்தவிதமான சினிமா அறிவிப்புகளும் வெளியாகாமல் இருந்தன. இந்த சமயத்தில் அதையெல்லாம் எதற்காக அறிவிக்க வேண்டும் என பலரும் அவற்றைத் தள்ளிப் போட்டுவிட்டார்கள்.
ஆனால், விஷ்ணு விஷால் அவர் தயாரித்து நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்புடன் அதன் முதல் பார்வையையும் வெளியிட்டுள்ளார்.
‘மோகன்தாஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை முரளி கார்த்திக் இயக்குகிறார்.
இப்படத்திற்காக வெளியிடப்பட்ட முதல் பார்வை போஸ்டரில் ஒரு சுவாரசியத் தகவல் இருக்கிறது.
இந்த போஸ்டருக்காக தனியாக எந்தப் புகைப்படத்தையும் எடுக்கவில்லையாம். விஷ்ணு விஷாலின் காதலியான ஜுவாலா கட்டா அவருடைய மொபைல் போனில் எடுத்த ஒரு போட்டோவாம். அதையே அப்படியே படத்தின் முதல் பார்வைக்காகப் பயன்படுத்தி உள்ளார்கள்.
விஷ்ணு விஷால், ஜுவாலா கட்டா திருமணம் இந்த வருடம் நடக்கும் என்று சொல்லப்படுகிறது