திரைப்பட இயக்குனராக அறிமுகமாகும் தனஞ்செயன்

தமிழ்த் திரையுலகத்தின் கடந்த சில வருடங்களாக சினிமா தயாரிப்பில் நல்ல அனுபவம் வாய்ந்தவராக இருப்பவர் ஜி.தனஞ்செயன்.

கார்ப்பரேட் தயாரிப்பு நிறுவனங்களில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி பல முக்கிய திரைப்படங்கள் உருவாகக் காரணமாக இருந்தவர் போப்டா மீடியார் ஒர்க்ஸ் மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் நிறுவனம் சார்பில் தற்போது படங்களைத் தயாரித்து வருகிறார்.

விரைவில் திரைப்பட இயக்குனராகவும் தன் திரையுலகப் பயணத்தில் அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்க உள்ளார்.

இயக்குனராக அறிமுகமாக உள்ளது பற்றி அவர் கூறுகையில்,

நான் நிர்வாகத் தயாரிப்பாளராக பல படங்களில் பணியாற்றியபோது அப்படங்களின் கதை விவாதத்திலும், திரைக்கதை உருவாக்கத்திலும், பட உருவாக்கத்தின் பல்வேறு துறைகளிலும் இணைந்து பணியாற்றி உள்ளேன்.

படத்தின் வெற்றி தோல்விகள் மற்றும் அதில் கிடைத்த அனுபவங்கள் படத்தினை உருவாக்குவதில் நிறைய பாடங்களை கற்றுத் தந்தது.

போப்டா பிலிம் இன்ஸ்டிடியூட்டில் ல் எனது பயணம் பல சினிமா ஜாம்பவான்களுடன் அவர்களது பொன்னான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் பெருமையான தருணமாக அமைந்தது.

அந்த அனுபவங்கள் எனக்குள் கதையை ஒரு திரைப்படத்தை உருவாக்கும் ஆர்வத்தை பல வருடங்களாக விதைத்திருந்தது. ஆனாலும் பல்வேறு வேலை தொடர்பான காரணங்களால் அக்கனவு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.

கடைசியில் எனது மனைவி எனது இந்தப் பயணத்தை ஊக்குவித்து துவக்கி வைத்தார்.

கடந்த 4 மாதங்களாக நானும் எனது குழுவும் படத்தின் திரைக்கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தோம். பின்னர் நடிகர்களிடமும் தொழில்நுட்பக் கலைஞர்களிடமும் எனது திரைக்கதையை சொன்னபோது அவர்கள் வெகுவாக பாராட்டி, மிகுந்த ஆர்வத்துடன் இந்த படத்தில் இணைந்து பணியாற்ற விரும்பினார்கள்.

எனது மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பான தருணத்தில் இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.

இப்படத்தில் பங்குபெற உள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரத்தை இந்த டிசம்பரில் வெளியிட உள்ளோம்.

ஜனவரி 2020 ல் ஷூட்டிங்கை துவங்க உள்ளோம். இது ஒரு புதிய வகை க்ரைம் திரில்லர் படமாக ஒரு புத்தம்புது அனுமபவமாக இந்தப்படம் இருக்கும்,” என்கிறார் தனஞ்செயன்.

Read Previous

4 மொழிகளில் ‘தர்பார்’ மோஷன் போஸ்டர்

Read Next

‘மாநாடு’ படத்தில் மீண்டும் சிம்பு

Most Popular