வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, வெங்கட் பிரபு இயக்க, சிம்பு நாயகனாக நடிக்க ‘மாநாடு’ என்ற படத்தை 2018ம் ஆண்டு ஜுன் மாதம் அறிவித்தனர்.
அதற்குப் பிறகு பல முறை அந்தப் படம் பற்றி பல்வேறு விதமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது. அதில் குறிப்பாக படம் ‘டிராப்’ என்ற செய்திதான் அதிகம் வெளிவரும்.
மூன்று மாதங்களுக்கு முன்பு இப்படத்திலிருந்து சிம்பு நீக்கப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். அதுவரை வந்த வதந்திகளை அது உண்மையாக்கியது.
உடனேயே, சிம்பு தரப்பில் அவரே தயாரித்து இயக்கி நடிக்க ‘மகா மாநாடு’ படம் தயாராக உள்ளதாக தகவல் வெளியானது.
இருப்பினும் ‘மாநாடு’ படத்தில் மீண்டும் சிம்புவை நடிக்க வைக்க சிலர் முயற்சி செய்து சிம்பு தரப்பை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார்கள். அவர் சார்பாக அவரது அம்மா உஷா ராஜேந்தர் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டதாக சொல்லப்பட்டது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சிம்பு தவறாமல் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என அவர் சொன்னதாகச் சொன்னார்கள்.
இதனிடையே, நேற்று இரவு திடீரென படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டிவிட்டரில், “விரைவில் எஸ்டிஆரின் மாநாடு படப்பிடிப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என அறிவித்தார்.
நேற்று சபரிமலை செல்வதற்காக கோயிலில் சிம்பு மாலை அணிந்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அங்கிருந்தே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விரைவில் str in மாநாடு படபிடிப்பு தேதி அறிவிக்கப்படும். pic.twitter.com/Zl6t5YOXvH
— sureshkamatchi (@sureshkamatchi) November 5, 2019