லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘தர்பார்’.
இப்படத்தின் முதல் பார்வை மற்றும் இரண்டாவது பார்வை ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தின் மோஷன் போஸ்டரை வரும் நவம்பர் 7ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளார்கள்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் அந்தந்த பிரபலங்கள் அதை வெளியிட உள்ளார்கள்.
2020ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ‘தர்பார்’ வெளியாக உள்ளது.