மீண்டும் இணைகிறது ‘டிடி ரிட்டன்ஸ்’ படக்குழு

மீண்டும் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்க படமொன்று தயாராக உள்ளது.

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், சுரபி, பெப்சி விஜயன், ரெடின் கிங்ஸ்லி, பிரதீப் ராவத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டிடி ரிட்டன்ஸ் 2’. 

கடந்த ஆண்டு வெளியான இந்தப் படம், திரையரங்குகள் சார்பில் வெளியிடப்பட்ட அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் இடம்பிடித்தது.

’டிடி ரிட்டன்ஸ்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும், பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கவுள்ளார். இதற்கு ‘டிடி ரிட்டன்ஸ் 2’ எனப் பெயரிட்டுள்ளது படக்குழு. 

இதில் சந்தானத்துடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகின்றன. ‘டிடி ரிட்டன்ஸ் 2’ படத்தினை எஸ்.பி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

Read Previous

கவின் நடிப்பில் உருவாகும் ‘கிஸ்’

Read Next

தமிழில் நாயகனாகும் சிவராஜ்குமார்

Most Popular