தமிழில் நாயகனாகும் சிவராஜ்குமார்

தமிழில் உருவாகும் படமொன்றில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிவராஜ்குமார்.

ரஜினி நடிப்பில் வெளியான ’ஜெயிலர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார் சிவராஜ்குமார். அவரது கதாபாத்திரத்துக்கு தமிழில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தனுஷுடன் ‘கேப்டன் மில்லர்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தமிழில் நாயகனாக நடிக்க ஒபப்ந்தமாகியுள்ளார் சிவராஜ்குமார். இந்தப் படத்தினை வடிவேல் இயக்கவுள்ளார், ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 

இதில் சிவராஜ்குமாருடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் 2 கெட்டப்களில் நடிக்கவுள்ளார் சிவராஜ்குமார். 

இந்தப் படம் தவிர்த்து சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் ‘ஈட்டி’ இயக்குநர் ரவிஅரசு இயக்கத்தில் உருவாகும் படமொன்றிலும் சிவராஜ்குமார் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Read Previous

மீண்டும் இணைகிறது ‘டிடி ரிட்டன்ஸ்’ படக்குழு

Read Next

ராஜமெளலி – மகேஷ் பாபு படம்: இந்தோனேசியா நடிகையிடம் பேச்சுவார்த்தை

Most Popular