சதீஷ் இயக்கத்தில் கவின் நடித்து வரும் படத்துக்கு ‘கிஸ்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.
‘டாடா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, கவின் நடிப்பில் உருவாகும் படங்களுக்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. தற்போது எலன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்டார்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கவின். இந்தப் படத்தினை பிப்ரவரி மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
‘ஸ்டார்’ படத்துக்குப் பிறகு நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் கவின். இந்தப் படத்தின் சுமார் 70% படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துவிட்டது.
இதில் நாயகியாக ‘அயோத்தி’ படத்தில் நடித்த ப்ரீத்தி அஷ்ரானி நடித்து வருகிறார்.தற்போது இந்தப் படத்திற்கு ‘கிஸ்’ எனத் தலைப்பிட முடிவு செய்துள்ளது படக்குழு.
‘ஸ்டார்’ படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு, இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.