விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகவுள்ள படம் ‘எல்.ஐ.சி’.
அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தினை லலித் குமார் தயாரிக்கவுள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் பூஜை நடைபெற்றது.
‘எல்.ஐ.சி’ படக்குழுவினருக்கு தலைப்பால் பெரும் சிக்கல் ஏற்பட்டது. ஏனென்றால், எல்.ஐ.சி என்ற பெயரில் இயங்கி வரும் அரசாங்க நிறுவனம், ‘எல்.ஐ.சி’ படக்குழுவினருக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் படத்தின் தலைப்பினை 7 நாட்களுக்குள் மாற்றாவிட்டால், படக்குழுவினர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நோட்டீஸ் தயாரிப்பாளர் லலித் குமார் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் படக்குழுவினர் தலைப்பை மாற்றி அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது.