பாகுபலி, கனவு நனவானது – தமன்னா

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா டகுபட்டி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடித்து 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளிவந்த படம் ‘பாகுபலி 2’.

இன்று படம் வெளிவந்து மூன்று வருடங்களை நிறைவடைந்ததை முன்னிட்டு படக்குழுவினர் படம் பற்றிய அவர்களது நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

முதல் பாகத்தில் நாயகியாக அதிக நேரம் இடம் பிடித்து, தன் அழகாலும், ஆக்ஷனாலும் ரசிகர்களைக் கவர்ந்தவர் தமன்னா. இரண்டாம் பாகத்தில் அதிகமான முக்கியத்துவமில்லை என்றாலும் மூன்றாவது வருடக் கொண்டாட்டத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அதுகுறித்து இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டிருப்பதாவது,

“அற்புதமான மூன்றாவது ஆண்டை நாங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்பதை நம்ப முடியவில்லை.

முதல் நாள் படப்பிடிப்பு இன்னும் ஞாபகம் இருக்கிறது. ராஜமௌலி சார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவு நனவானது.

ஒரு பெரிய குடும்பம் போல இருந்த மொத்த பாகுபலி படக்குழுவிற்கும் ரசிகர்களுக்கும் நன்றி. 

ஒவ்வொரு நாளும் அன்பைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி,” எனத் தெரிவித்துள்ளார்.

Read Previous

பாகுபலி 2 படத்தின் மூன்று ஆண்டுகள், பிரபாஸ் நன்றி

Read Next

நெட்பிளிக்ஸில் வெளியானது ‘ஆர்கே நகர்’ திரைப்படம்

Most Popular