பாகுபலி 2 படத்தின் மூன்று ஆண்டுகள், பிரபாஸ் நன்றி

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா டகுபட்டி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடித்து 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளிவந்த படம் ‘பாகுபலி 2’.

இந்தியத் திரையுலகில் முதன் முதலில் 1000 கோடி ரூபாய் வசூலைக் கடந்த ஒரு படம். இன்று படம் வெளிவந்து மூன்று வருடங்களை நிறைவடைந்ததை முன்னிட்டு படக்குழுவினர் படம் பற்றிய அவர்களது நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

படத்தின் நாயகன் பிரபாஸ் படம் பற்றி நினைவு கூறுகையில்,

‘'பாகுபலி 2' நம் இந்திய தேசமே விரும்பிய படம் மட்டுமல்ல, என் வாழ்க்கையின் மிகப்பெரிய படமும் கூட.  

இப்படம் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யும் இத்தருணத்தில், இதை மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்றாக மாற்றிய எனது ரசிகர்கள், படக்குழுவினர் மற்றும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி ஆகியோருக்கு நான் நன்றி செலுத்த கடமை பட்டிருக்கிறேன்.  

என் மீது அளப்பரிய அன்பு கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும், எனக்கு  வாய்ப்பளித்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து மகிழ்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

Read Previous

அன்பை விதைப்போம் – சூர்யா அறிக்கை

Read Next

பாகுபலி, கனவு நனவானது – தமன்னா