‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்திற்குப் பிறகு சந்தானம் நாயகனாக நடிக்கும் படம் ‘இனிமே இப்படித்தான்’.
முருகானந்த் இயக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் குமார் தயாநிதி இசையமைத்துள்ளார்.
சந்தானம் ஜோடிகளா ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் நாயகி ஆஷ்னா சவேரி, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தின் நாயகி அகிலா கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் இசை வெளியீடு வரும் 10ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
சிலம்பரசன், ஆர்யா படத்தின் இசையை வெளியிட உதயநிதி ஸ்டாலின் பெற்றுக் கொள்கிறார். படத்தின் டிரைலரை இயக்குனர்கள் ராஜேஷ், ‘வீரம்’ சிவா வெளியிட இயக்குனர் கௌதம் மேனன் பெற்றுக் கொள்கிறார்.
இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட வாய்புள்ளதாகத் தெரிகிறது.