விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் இப்படத்தில் பாசில் ஜோசப், எல்.கே. அக்ஷய் குமார், ஜான் விஜய், ஜாபர் சாதிக், நோபல் கே. ஜேம்ஸ், ஷாரிக் ஹாசன், அருணாச்சலேஸ்வரன் PA., சத்யன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்டோர் நடிக்கும் படம் ‘ராவடி’.
இப்படத்தின் முதல் பாடலான ‘அட்ரா பரமா’ பாடலை தற்போது வெளியிட்டுள்ளனர். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ள இப்பாடலை உதய் எழுத, அறிவு பாடியுள்ளார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் எஸ். எஸ். லலித்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு எல். கே. விஷ்ணுகுமார் இணைத் தயாரிப்பு செய்துள்ளார்.
லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்ய, ஆடை வடிவமைப்பை பிரியா ரவி, நடன அமைப்பை எம். ஷெரிப், சண்டைப் பயிற்சியை டான் அசோக் மேற்கொண்டுள்ளனர். ஒலி வடிவமைப்பை எஸ். அழகியகூத்தன் மற்றும் சுரேன் ஜி கவனிக்க, ஒலி கலவையை சுரேன் ஜி மேற்கொண்டுள்ளார். ஆகாஷ் பாலாஜி படப்பிடிப்புத் தளப் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றியுள்ளார். மக்கள் தொடர்பு – யுவராஜ்; தயாரிப்பு நிர்வாகம் – ஆர். எஸ். வெங்கட்; எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர் – மணிகண்டன்; கிரியேட்டிவ் புரொடியூசர் – அருண் கே.