‘வீரம்’ சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் ஆரம்பமானது.
அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் அஜித்தின் ஜோடியாக ஸ்ருதிஹாசன், தங்கையாக லட்சுமி மேனன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஏற்கெனவே, தமிழில் ராசியான நடிகை என்று பெயர் பெற்ற லட்சுமி மேனன் இந்தப் படத்தில் ஒரு தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.
அஜித்துடன் இணைந்து நடிப்பது குறித்து லட்சுமி மேனன் அவருடைய சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது,
“இதை எழுதுவதற்கே நான் ஆர்வமாக உள்ளேன். அஜித் ஸாருடன் நடிக்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும், என்னுடைய கனவுகளில் அதுவும் ஒன்று. கோலிவுட்டின் தலயுடன் நான் நடிப்பது கனவாக இருந்து இன்று உண்மையானது. அவருடன் நடிக்கும் ஒவ்வொரு நிமிடத்திற்காகவும் நான் காத்திருக்கிறேன். உங்களின் பிரார்த்தனையும் அன்பும் எங்களது புதிய படத்திற்கு வேண்டும், என லட்சுமி மேனன் கேட்டுக் கொண்டுள்ளார்.