தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் காஜல் அகர்வால்.
கடந்த ஆண்டு தமிழில் வெளிவந்த ‘பாயும் புலி’ படத்திற்குப் பிறகு அவர் நடித்து இந்த ஆண்டில் எந்தப் படமும் இன்னும் வரவில்லை.
தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் ‘பிரம்மோற்சவம்’ படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார்.
அடுத்து விக்ரம் ஜோடியாக விரைவில் ‘கருடா’ படத்தில் நடிக்க உள்ளார்.
சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஆக்ஷன் கதாபாத்திரங்களிலும், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அப்படி ஒரு கதாபாத்திரம் உள்ள படம் வந்தால் விரைவில் காஜல் அகர்வாலை இன்னொரு விஜயசாந்தியாகப் பார்க்கலாம்.