தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த ஆர்யா தற்போது ‘மஞ்சப்பை’ ராகவன் இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறார்.
முற்றிலும் மலைப் பிரதேசத்தில் நடக்கம் கதைக் களத்தில் கதாபாத்திரத்திற்கேற்றபடி தன்னுடைய உடலமைப்பை வலிமையான தோற்றத்திற்கு மாற்றியிருக்கிறார்.
இதற்காக கடும் உடற்பயிற்சிகள் செய்து தன்னுடைய கைகளையும், தோள்களையும் மற்ற ஹீரோக்களே கண்டு பொறாமைப்படும் அளவிற்கு மாற்றியிருக்கிறார்.
உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சியில் இருக்கும் போது அவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களையும் மிரள வைத்துள்ளது.
கதாபாத்திரத்திற்காக தன்னை மாற்றிக் கொள்ளும் நடிகர்கள் பட்டியலில் தற்போது ஆரயாவும் இணைந்துள்ளார்.