மே 1ம் தேதி ‘கபாலி’ டீசர், அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரஜினிகாந்த் ரசிகர்கள் மட்டுமல்லாது, திரையுலக ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘கபாலி’ படத்தின் டீசர் மே 1ம் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சற்று முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் முதல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

ரஜினிகாந்த் அவருடைய டப்பிங்கை சில நாட்களுக்கு முன்புதான் முடித்தார். தற்போது மற்ற நட்சத்திரங்கள் டப்பிங் பேசி வருகிறார்கள். விரைவில் அவையும் முடிந்துவிடும்.

மே 1ம் தேதி உழைப்பாளர் தினம், ஆனால், அஜித் ரசிகர்கள் வழக்கம் போல் ‘அஜித் பிறந்த நாளில் ரஜினிகாந்த் பட டீசர்’ என பேச ஆரம்பிப்பார்கள்.

‘வேதாளம், தெறி’ டீசரின் அனைத்து சாதனைகளையும் ‘கபாலி’ முறிடியக்கும் என இப்போதே எதிர்பார்ப்பு எழுந்துவிட்டது.

Read Previous

மிரட்டலான தோற்றத்தில் ஆர்யா

Read Next

ஒரு தலைக் காதலில் ‘கொள்ளிடம்’