தில்லுக்கு துட்டு – சந்தானத்தின் சரவெடி…

சின்னத் திரையில் ‘லொள்ளு சபா’ மூலம் இணைந்து பலரையும் சிரிக்க வைத்த சந்தானம் – இயக்குனர் ராம்பாலா கூட்டணி தற்போது ‘தில்லுக்கு துட்டு’ மூலம் பெரிய திரையிலும் சிரிக்க வைக்க உள்ளார்கள்.

‘தில்லுக்கு துட்டு’ திரைப்படம் நாளை மறுநாள் ஜுலை 7ம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தில் நாயகியாக ஷானாயா நடித்துள்ளார். ஹிந்தி நடிகர் சௌரப் சுக்லா வில்லனாக நடித்துள்ளார்.

“பேய் படம் என்றாலே ஒரு வீட்டிற்குள் சிலர் மாட்டிக் கொள்ள, அங்கு பேய் வந்து நடத்தும் அட்டகாசம்தான் பெரும்பாலான படமாக இருக்கும்.

பொதுவாக நாயகனைப் பழிவாங்க அடியாட்களைத்தான் அனுப்புவார்கள். ஆனால், இந்தப் படத்தில் தன் மகளைக் காதலித்ததற்காக வில்லன் ஒரு வீட்டிற்குள் நாயகன் உட்பட சிலரை வரவழைக்கிறார். அங்கு நடக்கும் விஷயங்கள்தான் படத்தின் கதை.

இப்படம் சந்தானத்திற்கு திருப்புமுனைப் படமாக இருக்கும். அது மட்டுமல்ல அவரை வேறு ஒரு தளத்திற்கு இந்தப் படம் கொண்டு செல்லும்,” என நம்பிக்கையுடன் சொல்கிறார் இயக்குனர் ராம்பாலா.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

Read Previous

மீண்டும் தமிழுக்கு வரும் நந்திதா தாஸ்

Read Next

Child artiste Monica in Vijay 60

Most Popular