‘அழகி’ தனலட்சுமியையும், ‘பாட்டுச் சொல்லி..பாடச் சொல்லி…’ பாடலையும் அவ்வளவு சீக்கிரம் திரைப்பட ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
‘அழகி’ தனலட்சுமி கதாபாத்திரத்தில் அவ்வளவு அற்புதமாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை நந்திதா தாஸ்.
அதன் பின் மணிரத்னம் இயக்கத்தில் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்திலும், சுமதி ராம் இயக்கத்தில் மம்முட்டி நடித்த ‘விஷ்வ துளசி’ படத்திலும், கடைசியாக 2012ல் வெளிவந்த ‘நீர்ப்பறவை’ படத்திலும் நடித்திருந்தார்.
இப்போது மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்க உள்ளார். குட்டி ரேவதி இயக்குனராக அறிமுகமாக உள்ள படத்தில் சமுத்திரக்கனி நாயகனாக நடிக்கும் படத்தில் நந்திதா தாஸ் நாயகியாக நடிக்கப் போகிறார்.
தமிழ்க் குடும்பங்களில் தங்களது குடும்பத்தாராலேயே சிரமத்திற்குள்ளாகும் பெண்களைப் பற்றிய படமாக இந்தப் படம் இருக்கும் என்கிறார் குட்டி ரேவதி.
இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது.