நயன்தாரா நடிக்கும் ‘தொர’

‘களவாணி’ இயக்குனர் சற்குணம் தயாரிப்பில் நயன்தாரா நாயகியாக நடிக்கும் படத்திற்கு ‘தொர’ என பெயர் வைத்துள்ளார்கள்.

இது பற்றிய அறிவிப்பை சற்று முன் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார் அனிருத்.

திகில் படமாக உருவாக உள்ள இந்தப் படத்தை சற்குணத்தின் உதவியாளர் தாஸ் ராமசாமி இயக்குகிறார்.

‘களவாணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான சற்குணம் அடுத்து ‘வாகை சூடவா’ படத்தையும், ‘நய்யாண்டி’ படத்தையும் இயக்கினார்.

‘மஞ்சப் பை’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறிய சற்குணம், அடுத்து நயன்தாரா நடிக்க உள்ள ‘தொர’ படத்தையும் தயாரிக்கிறார்.

இந்தப் படத்திற்காக நயன்தாராவுக்கு பெரும் தொகை சம்ளமாகக் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Read Previous

Akira – Official Trailer

Read Next

மீண்டும் தமிழுக்கு வரும் நந்திதா தாஸ்

Most Popular