விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் மக்களிடம் புகழ் பெற்ற ஒரு நிகழ்ச்சி ‘சூப்பர் சிங்கர்’.
சீனியர், ஜுனியர் என மாறி மாறி இந்த நிகழ்ச்சி நடைபெறும். தற்போது ‘சூப்பர் சிங்கர் ஜுனியர் 5’ சீசன் நடைபெற்று முடிந்தது.
இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. சிவகார்த்திகேயன், பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.
இறுதிப் போட்டியில் தனுஷ், மோனிகா, பவன், கௌரி, ப்ரித்திகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர்களில் ப்ரித்திகா 6 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று ‘சூப்பர் சிங்கர் ஜுனியர் 5’ பட்டத்தை வென்றார்.
அவருக்கு 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது. முதல் ரன்னர்-அப்-பாகத் தேர்வு பெற்ற பவின் 5 லட்ச ரூபாயும், இரண்டாவது ரன்னர்-அப்-பாகத் தேர்வு பெற்ற கௌரி 3 லட்ச ரூபாயும் பரிசு பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் திரையுலகத்தைச் சேர்ந்த பல பாடகர், பாடகிகளும், ‘சூப்பர் சிங்கர் 5’ போட்டியின் நடுவர்களான மனோ, சித்ரா, சுபா, அனந்த் வைத்தியநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.