64வது ஃபிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள் யார் ? யார் ?

பல வருடங்களாகப் புகழ் பெற்ற திரைப்பட விருதுகள் என்றால் ஃபிலிம் பேர் பத்திரிகை வழங்கும் விருதுகள்தான். ஹிந்தித் திரைப்படங்களுக்கென தனி விருதுகள் வழங்கும் விழாவும், தென்னிந்தியப் படங்களுக்கென தனி விருதுகள் வழங்கும் விழாவும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.

64வது ஃபிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் தென்னிந்தியத் திரைப்பட உலகத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்ப் படங்களுக்கான விருதுகளை வென்றவர்கள் விவரம் வருமாறு…

சிறந்த படம் – ஜோக்கர்
சிறந்த இயக்குனர் – சுதா கொங்கரா (இறுதிச் சுற்று)
சிறந்த நடிகர் – மாதவன் – (இறுதிச் சுற்று)
சிறந்த நடிகை – ரித்திகா சிங் (இறுதிச் சுற்று)
சிறந்த நடிகர் – விமர்சகர் விருது – சூர்யா (24)
சிறந்த நடிகை – விமர்சகர் விருது – த்ரிஷா (கொடி)
சிறந்த துணை நடிகர் – சமுத்திரக்கனி (விசாரணை)
சிறந்த துணை நடிகை – தன்ஷிகா (கபாலி)
சிறந்த அறிமுக நடிகர் – சிரிஷ் (மெட்ரோ)
சிறந்த அறிமுக நடிகை – மஞ்சிமா மோகன் (அச்சம் என்பது மடமையடா)
சிறந்த இசையமைப்பாளர் – ஏ.ஆர்.ரகுமான் (அச்சம் என்பது மடமையடா)
சிறந்த பாடல் ஆசிரியர் – தாமரை (அச்சம் என்பது மடமையடா)
சிறந்த பின்னணிப் பாடகர் – சுந்தரய்யர் (ஜோக்கர் – ஜாஸ்மினு…)
சிறந்த பின்னணிப் பாடகி – ஸ்வேதா மோகன் (கபாலி – மாய நதி..)
சிறந்த ஒளிப்பதிவாளர் – திரு (24)
வாழ்நாள் சாதனையாளர் விருது – விஜயநிர்மலா

Read Previous

Sathya – Official Trailer

Read Next

சூப்பர் சிங்கர் ஜுனியர் 5, ப்ரித்திகா பட்டம் வென்றார்…

Most Popular