தனுஷ் நடித்து வெளிவந்த மாபெரும் வெற்றிப் படமான ‘திருடா திருடி’ படத்தை இயக்கியவர் சுப்ரமணியம் சிவா. அவர் தற்போது சமுத்திரக்கனி நாயகனாக நடிக்கும் ‘வெள்ளை யானை’ படத்தை இயக்கி வருகிறார்.
விவசாயத்தையும், விவசாயிகளின் பிரச்சனைகளையும் மையப்படுத்திய கதையான இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்க, ‘மனம் கொத்திப் பறவை’ படத்தில் நாயகியாக நடித்த ஆத்மியா கதையின் நாயகியாக நடிக்கிறார்.
விஷ்ணு ரங்கசாமி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். எ.எல்.ரமேஷ் படத் தொகுப்பு செய்கிறார். இப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டது.
மினி ஸ்டுடியோ சார்பில் எஸ். வினோத்குமார் இப்படத்தைத் தயாரிக்கிறார்.