சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தில் ‘பசங்க 2’ படத்தை இயக்கியதற்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கி வரும் படத்திற்கு ‘கடைக்குட்டி சிங்கம்’ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள்.
அண்ணன் சூர்யாவின் தயாரிப்பில் தம்பி கார்த்தி முதன் முறையாக நடிக்கிறார். படத்தின் நாயகிகளாக ‘வனமகன்’ சாயிஷா, ‘மேயாத மான்’ பிரியா பவானிசங்கர் நடிக்கிறார்கள். சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், பானு ப்ரியா, மௌனிகா, மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
கார்த்தி நடிக்கும் ஒரு படத்திற்கு முதன் முறையாக டி. இமான் இசையமைக்கிறார்.
தெலுங்கில் இப்படத்திற்கு ‘சின்னா பாபு’ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டது. 2 டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா தயாரிக்க, ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் இணை தயாரிப்பு செய்கிறார். படத்தின் படப்பிடிப்பு தென்காசி சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தை தமிழ், தெலுங்கில் வரும் ஏப்ரல் மாதம் வெளியிட உள்ளார்கள்.