விஜய் சேதுபதி நடித்த ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜஸ்டின் பிரபாகரன்.
‘ஒரு நாள் ஒரு கூத்து’ படத்தில் இடம் பெற்ற ‘அடியே…அழகே…’ பாடல் மூலம் இசை ரசிகர்களுக்கும் நன்றாகவே அறிமுகமானார்.
அடுத்து தெலுங்குத் திரையுலகிலும் அறிமுகமாக உள்ளார். அது பற்றி ஜஸ்டின் பிரபாகரன் கூறுகையில்,
“நான் அறிமுகமாகும் தெலுங்கு படத்தின் கதாநாயகன் ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவரகொன்டா. அவர் படத்தின் மூலம் அறிமுகமாவது என் பாக்கியம். இந்தப் படத்தின் இயக்குனர் எனக்கு நீண்ட நாள் நண்பர். நாங்கள் இருவரும் ஏற்கனவே ‘மரோ பிரபஞ்சம்’ என்ற குறும் படத்தில் பணியாற்றினோம்.
தமிழில் சசிகுமார் நடிக்கும் ‘நாடோடிகள் 2’, அதர்வா நடிக்கும் ‘ஒத்தைக்கு ஒத்த’, எஸ்ஜே சூர்யாவின் பெயரிடப்படாத ஒரு புதிய படம் என்று படங்கள் இருக்கிறது. மலையாளத்தில் ஏற்கனவே அறிமுகம் ஆகி விட்டேன். தற்போது தெலுங்கிலும் அறிமுகமாவது எனக்கு மிகுந்த பெருமை. இசைக்கு எப்படி மொழியில்லை, இசை கலைஞனுக்கும் அப்படியே,”என்கிறார் ஜஸ்டின் பிரபாகரன்.