போட்டி இல்லாமல் நாளை வெளியாகும் ‘மெர்க்குரி’

தமிழ்த் திரையுலகத்தில் கடந்த 47 நாட்களாக நடந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது. நாளை 20ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தி வைக்கப்பட்ட பட வெளியீடுகளும், படப்பிடிப்புகளும் ஆரம்பமாக உள்ளன.

ஒன்றரை மாத இடைவெளிக்குப் பிறகு நாளை ‘மெர்க்குரி’ படம் வெளியாக உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

பிரபுதேவா, இந்துஜா, சனந்த், தீபக் பரமேஷ், சஷான்க் புருஷோத்தமன், அனிஷ் பத்மநாபன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படம் ஒரு மௌனப் படம், அதாவது படத்தில் உள்ள ஒருவர் கூட பேச மாட்டார்கள். அதற்கேற்ற விதத்தில்தான் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் இப்படம் கடந்த வாரம் வெளியாகிவிட்டது. மற்ற இடங்களில் வெளியாகிவிட்டதாலும், நாளையே இப்படத்தை வெளியிட படத்தின் தயாரிப்பாளர்கள் தயாராக இருந்ததாலும் ஸ்டிரைக் முடிந்த ஓரிரு நாட்களிலேயே இப்படம் வெளியாகிறது.

வேறு எந்தப் படங்களும் போட்டிக்கு இல்லாததாலும், விடுமுறை நாட்கள் என்பதாலும் அடுத்த சில நாட்களில் இப்படத்திற்கு நல்ல வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

எங்கிட்ட மோதாதே – விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி

Read Next

லட்சுமி ராய் டிவீட்டிய நீச்சல் உடை புகைப்படம்

Most Popular