விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சி, ‘எங்கிட்ட மோதாதே’.
இந்த நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் 21 முதல் சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
ஒவ்வொரு வாரமும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் நடிக்கும் நட்சத்திரங்கள் குடும்பமாக வந்து போட்டியிடப் போகிறார்கள். “ராஜா ராணி, சரவணன் மீனாட்சி, சின்னத்தம்பி, அவளும் நானும்” மற்றும் பல தொடர்களிலிருந்து நட்சத்திரங்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நான்கு கலகலப்பான சுற்றுகள் உள்ளன. இதில் நட்சத்திரங்களின் ஆடல், பாடல், விளையாட்டு, நடிப்பு என பொழுதுபோக்கு அம்சங்கள் உண்டு.
இவர்களுக்கு இடையே நடக்கும் போட்டி முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த போட்டியாகவும் இருக்கும்.
இந்த நிகழ்ச்சியை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்குகிறார்.
ஒவ்வொரு வாரமும் இரண்டு நகைச்சுவை நட்சத்திரங்கள் இவர்களுடன் பங்கேற்று இந்த நிகழ்ச்சியை மேலும் குதூகலப்படுத்துவார்கள்.
இந்நிகழ்ச்சியின் முதல் எபிசோடில் ‘ராஜா ராணி’ மற்றும் ‘பொன்மகள் வந்தாள்’ குடும்பத்தினர் கலந்து கொள்கிறார்கள்.