தமிழ்த் திரையுலகத்தில் முன்னணி நடிகை இல்லை என்றாலும் லட்சுமி ராய் பற்றி தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள்.
2011ம் ஆண்டில் ‘காஞ்சனா, மங்காத்தா’ என்று இரண்டு பெரிய படங்களின் ஹீரோயினாக நடித்தார். ஆனால், அந்த வெற்றியை அதன் பின் அவர் தக்க வைத்துக் கொள்ளவில்லை.
திரையுலகத்தில் அறிமுகமாகி 13 வருடங்கள் ஆனாலும் இன்னும் அதே இளமையுடன்தான் இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து இந்திய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தற்போது ‘யார், நீயா 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இன்று திடீரென தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் நீச்சல் உடை புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் லட்சுமி ராய்.
அறிமுகமாக 13 வருடங்கள் ஆகிவிட்டாலும் தன்னைப் பார்த்து யாரும் வயதாகிவிட்டது என்று சொல்லக் கூடாதென இந்த புகைப்படத்தைப் பகிர்ந்திருப்பார் போலிருக்கிறது.
The body achieves what the mind believes.💪💖 do u believe ?
Time to get back in track and aim for better results #fitnessgoals #stayfit #workharder #goalstoreach 💪👊 pic.twitter.com/cAux8Y48nd— RAAI LAXMI (@iamlakshmirai) April 19, 2018