மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் டிரைன் படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
இயக்குநர் மிஷ்கின் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்கத்திற்கு திரும்பியுள்ளார். விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க, ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்க, நாசர், யூகி சேது, நரேன், கேஎஸ் ரவிக்குமார், கலையரசன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
படத்தை வி கிரியேஷன்ஸ் பேனரில் கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். இயக்கம், எழுத்து, இசை ஆகியவற்றை மிஷ்கின் தானே கவனித்துள்ளார்.
டீசர் சுமார் 43 வினாடிகள் நீளத்தில் வெளியாகியுள்ளது. நகரும் ரயிலுக்குள் நடக்கும் தீவிர ஆக்ஷன் காட்சிகள், வேகமான கட்ஸ் மற்றும் பதற்றமான விஷுவல்ஸ் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தின் கதை ஒரு மனிதன் ஆயுதம் ஏந்தியவர்களுடன் போராடி பணயக்கைதிகளை மீட்கும் முயற்சியைச் சுற்றி அமைந்துள்ளது.
மிஷ்கினின் தனித்துவமான இயக்க பாணி மற்றும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
படம் வரும் ஆகஸ்ட் 2026இல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தயாரிப்பு – வி கிரியேஷன்ஸ்
தயாரிப்பாளர் – கலைப்புலி எஸ் தாணு
இயக்கம், இசை – மிஷ்கின்
ஒளிப்பதிவு – பவுசியா பாத்திமா
படத்தொகுப்பு – ஸ்ரீவத்சன்
கலை இயக்கம் – மோகனமகேந்திரன்
நடிகர்கள் – விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், நாசர், யூகி சேது, நரேன், கேஎஸ் ரவிக்குமார், கலையரசன், சம்பத் ராஜ், இரா தயானந்த், அஜய் ரத்னம், வின்சென்ட் அசோகன், சிங்கம்புலி, சுரேஷ் சந்திர மேனன், செல்வா சந்திரசேகர், கனிகா, ஜனனி, தியா சர்மா மற்றும் பலர்.