‘தக் லைஃப்’ படத்தில் நடிகர்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன என்பது தெரியவந்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல், துல்கர் சல்மான், ஜெயம் ரவி, கெளதம் கார்த்திக், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘தக் லைஃப்’. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்து வருகின்றன. இந்தப் படத்தில் ஏற்பட்ட தேதிகள் குளறுபடியால் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இருவருமே விலகிவிட்டார்கள்.
இதனால், இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது இதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது முடிவாகிவிட்டது. துல்கர் சல்மான் கதாபாத்திரத்தில் சிம்பு, ஜெயம் ரவி கதாபாத்திரத்தில் கெளதம் கார்த்திக், கெளதம் கார்த்திக் கதாபாத்திரத்தில் அர்ஜுன் சிதம்பரம் நடிக்கவுள்ளனர். இனி எந்தவொரு மாற்றமும் இருக்காது என்கிறது படக்குழு.
ஏனென்றால் ஜெயம் ரவி கதாபாத்திரத்துக்கு அரவிந்த் சாமி, டொவினோ தாமஸ் உள்ளிட்ட பலரிடமும் பேசினார்கள். யாரிடமுமே தேதிகள் இல்லாத காரணத்தினால் கெளதம் கார்த்திக்கை நடிக்க வைக்க முடிவு செய்துவிட்டது படக்குழு. இந்தப் படத்தில் புதிதாக இணைந்துள்ளார் அர்ஜுன் சிதம்பரம். இவர் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஏற்கனவே நடித்தவர் என்பது நினைவுக் கூரத்தக்கது.
தற்போது டெல்லில் சிம்பு நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறது படக்குழு. அதனைத் தொடர்ந்து சென்னையில் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளது.