கிங் – புதிய போஸ்டர் வெளியீடு

ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் ‘கிங்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

‘கொலையாளி அல்ல; நான் காதலன்,’ என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்தப் போஸ்டர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சித்தார்த் ஆனந்த் இயக்கும் இப்படத்தில் ஷாருக்கான், சுஹானா கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே, அனில் கபூர், ராணி முகர்ஜி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கரீனா கபூர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். சச்சித் பாலோஸ் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் மற்றும் சச்சின்–ஜிகர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் மார்ஃபிளிக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் கௌரி கான், சித்தார்த் ஆனந்த், மம்தா ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படம், வரும் டிசம்பர் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

‘பதான்’ படத்திற்குப் பிறகு ஷாருக்கான் – சித்தார்த் ஆனந்த் மீண்டும் இணைந்திருப்பதும், சுஹானா கான் முழுநீளத் திரைப்படத்தில் அறிமுகமாவதும் ‘கிங்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

Read Previous

பேமிலி பாய் – டீசர் வெளியீடு

Read Next

லவ் 3.ஓ – மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா