பிளாக்நைட் பாய்ஸ் – பூஜையுடன் ஆரம்பம்

அருள் முருகன் பிக்சர் மற்றும் டிரீம் ரன்வே 26வது செஞ்சுரி நிறுவனங்கள் சார்பில் க.இ.மணிகண்டன் என்கிற விமல் ஜி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’.

தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து, சமூக வலைதள வீடியோக்கள் மூலம் கவனம் பெற்ற அமல் அஜித், இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். நடிகை தேவயானி – இயக்குநர் ராஜகுமாரன் தம்பதியின் மகளான பிரியங்கா ராஜகுமாரன் கதாநாயகியாக நடிக்கிறார்.

இன்றைய இளைஞர்களைக் கவரும் காதல் கதையுடன், குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ உருவாகிறது.

செம்பர் V. முருகேசன் இயக்கும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைக்க, இளங்கோ படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். T. முத்துராஜ் தயாரிப்பு வடிவமைப்பையும், கண்ணன் S கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர். P.C. ஸ்டண்ட்ஸ் சண்டைக் காட்சிகளை வடிவமைக்க, பாபா பாஸ்கர் நடன இயக்குநராகப் பணியாற்றுகிறார். பாடல்களை பா. விஜய் எழுதுகிறார்.

தயாரிப்பு மேற்பார்வையில் அனுபவம் கொண்ட விமல் G, தனது தயாரிப்பு அனுபவத்துடன் இப்படத்தை உருவாக்குகிறார். படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது.

Read Previous

பிரபுதேவா – சிம்ரன் நடிக்கும் ‘கமல் ஸ்ரீதேவி’

Read Next

‘மூக்குத்தி அம்மன் 2’ டிரைலர்