சியோன் பிலிம்ஸ் சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கும் ‘கமல் ஸ்ரீதேவி’ திரைப்படத்தை பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிக்கின்றனர். பிரபுதேவா, சிம்ரன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் மிதுன் ஜெய் சங்கர், ஸ்மேகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
கிருஷ்ணானந்த் கொட்டாரப்பட்டு எழுதி இயக்கும் இப்படம், குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் மாறுபட்ட காதல் கதையாக உருவாகிறது. மூணாறு மற்றும் சென்னையில் ஒரே கட்டமாகப் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, சரண் வேலாயுதன் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பையும், ராஜீவன் தயாரிப்பு வடிவமைப்பையும் கவனிக்கின்றனர்.
ஏற்கெனவே எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெளியான ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘வித் லவ்’ ஆகிய படங்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதில் ‘வித் லவ்’ திரைப்படத்தை சியோன் பிலிம்ஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கிய நிலையில், தற்போது மீண்டும் இணைந்து ‘கமல் ஸ்ரீதேவி’ படத்தை உருவாக்குகின்றனர்.