’விடாமுயற்சி’ படப்பிடிப்பு நிறுத்தம்: அஜித் நிபந்தனை

 ’விடாமுயற்சி’ படத்தினை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், படக்குழுவினருக்கு அஜித் நிபந்தனை விதித்துள்ளார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடாமுயற்சி’. அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு முழுமையாக அஜர்பைஜான் நாட்டில் தான் நடைபெற்றது.

அஜர்பைஜானில் ஏற்பட்ட சிக்கல், தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்ட நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு இன்னும் முடியவடையவில்லை. இதனால் ‘குட் பேட் அக்லி’ படத்தினை தொடங்கிவிட முடிவு செய்திருக்கிறார் அஜித்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு மே 10-ம் தேதி முதல் ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது. ‘விடாமுயற்சி’ படக்குழுவினருக்கு நிபந்தனை ஒன்றிணையும் விதித்துள்ளார்.

என்னவென்றால், இனி அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றால் ஒட்டுமொத்த படத்தினையும் முடித்துவிட்டுத் தான் திரும்ப வேண்டும். அதற்கு தகுந்தாற் தயாராகும்படி தயாரிப்பு நிறுவனத்திடம் சொல்லிவிட்டார் அஜித். இதனால் ‘குட் பேட் அக்லி’ முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு தான் ‘விடாமுயற்சி’ படத்தினை துவங்கப்படும்.

இந்த மாற்றத்தினால் ‘விடாமுயற்சி’ வெளியீடு தாமதமாகும் என்றே தெரிகிறது.

Read Previous

’தக் லைஃப்’-ல் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்

Read Next

வெளியானது சாந்தகுமாரின் “ரசவாதி” பட ட்ரெய்லர்

Most Popular