கடும் கெடுபிடிகளுடன் ‘கோட்’ படப்பிடிப்பு: என்ன காரணம்?

சென்னையில் கடும் கெடுபிடிகளுடன் ‘கோட்’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கோட்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்திற்கு யுவன் இசையமைத்து வருகிறார். சுமார் 80% படப்பிடிப்பு இதுவரை முடிவுற்று இருக்கிறது.

தற்போது சென்னையில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் கெடுபிடிகளுடன் ‘கோட்’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஏனென்றால் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியினை படமாக்கி வருகிறது படக்குழு. இதற்காக பல்வேறு முக்கிய கிராபிக்ஸ் கலைஞர்களும் இதில் கலந்துக் கொண்டுள்ளனர்.

இந்தப் படப்பிடிப்பு தளத்திற்குள் சில உதவி இயக்குநர்களுக்கு கூட அனுமதி கிடையாது. மேலும், அந்தக் காட்சிக்கு தேவையானவர்களை மட்டுமே அனுமதியளிக்கிறார்கள். மேலும், தொலைபேசியும் யாருக்கும் அனுமதியில்லை. ஏனென்றால் இந்தக் காட்சியிலிருந்து ஒரே ஒரு புகைப்படம் வெளியே சென்றால் கூட ஒட்டுமொத்த கதையும் தெரிந்து விடும் என்பதற்கு தான் இந்த மெனக்கிடல் என்கிறார்கள்.

Read Previous

தனுஷ் – ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநர் கூட்டணியா? – பின்னணி தகவல்கள்

Read Next

‘புஷ்பா’வில் பாடலுக்கு நடனம்: சமந்தா அதிருப்தி

Most Popular