இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ‘தடை உடை’

‘ஜிகர்தண்டா’ படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற நடிகர் சிம்ஹாவின் புதிய திரைப்படமான 'தடை உடை' எனும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளது. இப்படத்தில் அழுத்தமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கும்  நடிகை ரோகிணி, தன்னுடைய படப்பிடிப்பை தற்போது நிறைவு செய்துள்ளார்.

அறிமுக இயக்குநர் என்.எஸ். ராகேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தடை உடை'. சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மிஷா நரங்க் நடித்திருக்கிறார். இவர்களுடன் பிரபு, செந்தில், ரோகிணி, மணிகண்ட பிரபு, சரத் ரவி, ‘பழைய ஜோக்’ தங்கதுரை உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

சக்தி ஒளிப்பதிவு செய்ய ஹதீஃப் இசையமைக்கிறார். ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகி வரும் இப்படத்தை முத்ராஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் ரேஷ்மி சிம்ஹா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முழுமையாக நிறைவு பெறவிருக்கிறது. இந்நிலையில் நடிகை ரோகிணி தொடர்புடைய காட்சிகளின் படபிடிப்பு நிறைவடைந்ததை முன்னிட்டு, படக் குழுவினர் நடிகை ரோகிணியுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.

Read Previous

அடுத்தடுத்து மூன்று படங்களை வெளியிடும் சசிகலா புரொடக்ஷன்ஸ்

Read Next

பா ரஞ்சித் தயாரிக்கும் புதிய படம் ஆரம்பம்

Most Popular